குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் முன்னாள், முன்னணி தைகுண்டோ வீராங்கனை மென்டி மெலூன் (Mandy Meloon ) தாம் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக சுமத்திய குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அணியின் பயிற்றுவிப்பாளரான ஜேன் லோபஸினால், பல ஆண்டுகளுக்கு முன்னர் தாம் பாலியல் ரீதியான சித்திரவதைகளை அனுபவித்ததாக மென்டி தெரிவித்திருந்தார்.
மென்டியின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள மறுத்த அமெரிக்க நிர்வாகம், மென்டிக்கு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதித்திருந்தது. இதனால் கடுமையான மன உளைச்சல் மற்றும் பொருளாதார பாதிப்புக்களுக்கு மென்டி முகம்கொடுக்க நேரிட்டது. எனினும், மென்டியின் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது.மென்டியின் குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்வரும் காலங்களில் நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.