மியான்மாரில் நடைபெற்றுவரும் அடக்குமுறையிலிருந்து தப்புவதற்காக படகில் புப்பட்டநிலையில் கடலில் 9 நாட்கள் தத்தளித்த 8 குழந்தைகள் அடங்கிய 76 ரோஹிங்கிய முஸ்லிம்கள் சுமத்திராவினை சென்றடைந்துள்ளனர்
கடலிலேயே 9 நாட்கள் தத்தளித்ததால் இதில் பலருக்கும் உடலில் நீரின் அளவு குறைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்ர்களுக்கான மருத்துவ வசதிகளை இந்தோனேசியா செய்து கொடுத்துள்ளது.
மியான்மரின் கொடூரமான போர் நடைபெறும் ராக்கைன் மாநிலத்திலிருந்து இவர்கள் ஒருவருக்கு தலா 150 டொலர்கள் கொடுத்து படகில் புறப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. கடந்த ஓகஸ்ட் முதல் இதுவரை 7 லட்சம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் மலேசியாவுக்கு செல்ல புறப்பட்ட நிலையில் இந்தோனேசியாவினை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது