197
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் வாக்காளர் பதிவு மையத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மையத்தின் நுழைவாயிலில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட, இந்த தற்கொலை தாக்குதலில் மேலும் 119 பேர் காயமடைந்துள்ளனர். தாங்களே இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ் அமைப்பினர் தமது ஊடகத்தின் ஊடாக உரிமை கோரியுள்ளனர்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்காளர் பதிவு இந்த மாதம் ஆரம்பமாகியிருந்த நிலையில் இன்று இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Spread the love