168
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டதனால் கடற்கரை கிராமங்களில் வீடுகளை தண்ணீர் புபுந்தமையினால் 8 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
சுமார் 15 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பியதனால் கடற்கரை கிராம மக்களை, வருவாய்த் துறையினர் மீட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைத்தனர். கடல் சீற்றத்தால், கடற்கரை கிராமங்களில் நேற்று முன்தினம் முதல் மின்தடை ஏற்பட்டுள்ளது
மேலும் குளச்சல் துறைமுக பகுதியில் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்ற 2 இளைஞர்கள் அலையில் சிக்கி காயம் அடைந்துள்ளனர்.
Spread the love