இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வகை செய்யும் அவசர சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. வங்கிக் கடன் மோசடி, நிதி மோசடி மற்றும் ஊழல் என பொருளாதார குற்ற வழக்குகளில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பான சட்ட மசோதா தாக்கல கடந்த மாதம் 12-ம் திகதி பாராளுமன்ற மக்களவையில்; செய்யப்பட்டது.
எனினும் பாராளுமன்ற கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முழுமையாக முடக்கியதனால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது. இந்நிலையில், பொருளாதார குற்ற வழக்குகளில் சிக்கி தப்பியோடி தலைமறைவானவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் அவசர சட்டத்துக்கு அமைச்சரலை ஒப்புதல் வழங்கியது.
இதனையடுத்து இந்த அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியதையடுத்து சட்டம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது. இந்த அவசர சட்டம் 6 மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும். அதற்குள் பாராளுமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். எனவே, வரும் குளிர்கால கூட்டத் தொடரில் பொருளாதார குற்றவாளிகள் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது