குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
விகாரைகளுக்காக புதிதாக சட்டம் கொண்டு வர அரசாங்கம் முயற்சிப்பதாகவும் இந்த சட்டத்திற்கு அமைய நாட்டில் உள்ள அனைத்து விகாரைகளும் தரப்படுத்தப்படுத்தப்படுவது கேலிக்குரியது எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய விகாரைகள் வரையறுக்கப்பட்ட வகையில் தரப்படுத்தப்படும் எனவும் புதிதாக விகாரை ஒன்றை நிர்மாணிக்க வேண்டுமாயின் பல குழுக்களின் பின்னால் அலைந்து அனுமதியை பெற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில், விகாரைகள், தேவாலயங்கள், கோயில்கள் மற்றும் பள்ளிகளை நிர்மாணிக்க ஒவ்வொருவர் பின்னால் சென்று அனுமதி பெற தேவையில்லை. மத ஸ்தலங்களுக்கு உதவ வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் மத ஸ்தலங்களில் மட்டும் கைவைக்க வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.