192
கண்டி திகன பகுதியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அமித் ஜீவன் வீரசிங்க மற்றும் குண்டசாலை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 32 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்றையதினம் தெல்தெனிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் மே 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Spread the love