175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.ஆனைப்பந்நி சந்திக்கருகில் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஆனைபந்தி சந்திக்கருகில் இரவு 9.30 மணியளவில் டிப்பர் வாகனமும் துவிச்சக்கர வண்டியும் மோதியதிலையே குறித்த விபத்து இடம்பெற்றது.
குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மிக ஆபத்தான நிலையில் யாழ். போதான வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பில் யாழ்.காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love