சீனாவில் இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 உயிரிழந்துள்ளனர். சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் அமைந்துள்ள குறித்த விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 5பேர் காயமடைந்துள்ளனர். சீனாவில் பாதுகாப்பு விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதனால் அங்கு தீ விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.
சீனாவில் கடந்த 2015-ல் மருத்துவமனை; ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் பலியான சம்பவத்தினை தொடர்ந்து பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய கேள்விகள் எழுந்திருந்தன. இதனைத் தொடர்ந்து இந்த தீ விபத்து சம்பவத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என 21 பேருக் கடந்த வருடம் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது