குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாரிஸ் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு பெல்ஜிய நீதிமன்றம் இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பாரிஸ் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஸாலா அப்டிஸ்லாம் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரான சொபியான அயாரி என்பவருக்கும் 20 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அப்டிஸ்லாம் நீதிமன்ற விசாரணைகளின் போது பதிலளிக்கத் தவறியதுடன், விசாரணைகளை புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இருவரும் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருப்பது சந்தேகமின்றி புலனாகியுள்ளது எனவும் இதனால் இவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி மேரி பிரான்ஸ் கியுடெஜன் தெரிவித்துள்ளார்.