குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
அரசாங்கத்தில் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து சுதந்திரக் கட்சி இன்று தீர்மானிக்க உள்ளது அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்றைய தினம் தீர்மானிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்றைய தினம் கூடி இது குறித்து ஆராய உள்ளது. இன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அண்மையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் இந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து பெரும்பாலும் இன்றைய தினம் தீர்மானிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.