150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அடுத்த வாரத்தில் புதிய அமைச்சரவை கூடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யாருக்கு எவ்வாறான பதவிகள் வழங்கப்படும் என்பது பற்றிய இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் பொருத்தமான சரியான நபர்களை பரிந்துரை செய்ய வேண்டிய கடப்பாடு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உண்டு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
விஞ்ஞானபூர்வ அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டு சரியான முறையில் இம்முறை அமைச்சுக்கள் பகிரப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Spread the love