குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெலிக்கடை சிறைச்சாலை சம்பவத்துடன் தொடர்புடைய உயர் அதிகாரிகளின் விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியான நியோமல் ரங்கஜீவ மற்றும் சிறைச்சாலை திணைக்கள ஆணையாளர் எமில் ரஞ்சன் ஆகியோரின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் பல கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்துடன் குறித்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 8ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 28ம் திகதி இந்த இரண்டு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது