துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அடியமன் மாகாணத்தில இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அதிகமான வீடுகள் இடிந்துள்ளதனால் இடிபாடுகளுக்குள் சிக்கிய 39 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை ஏற்பட்ட இந்தநிலநடுக்கமானது 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் சில வினாடிகள் வரை நீடித்த இந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நான்குமுறை நில அதிர்வுகளும் ஏற்பட்டன.
இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆத்துடன் அந்த மாகாணத்துக்குட்பட்ட பாடசாலை , கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது