குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்றம் அனுமதி வழங்கினால் இந்த ஆண்டில் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயம் தொடர்பில் பாராளுமன்றம் ஆறு மாத காலத்திற்குள் அனுமதி வழங்கினால் மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலை இந்த ஆண்டின் இறுதிக்குள் நடத்த முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் டிசம்பர் மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக ஆறு மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தக்கூடிய சாத்தியம் உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கை விதிகளுக்கு புறம்பானது எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.