குளோபல் தமிழச் செய்தியாளர்
அணுத் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்தால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என அமெரிக்கா, ஈரானை கடுமையாக எச்சரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு சர்வதேச உடன்படிக்கைக்கு அமைய அணு திட்ட பரிசோதனைகளை நிறுத்திக் கொள்வதாக ஈரான் வாக்குறுதி அளித்திருந்தது. எனினும் இந்த வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஈரானுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை அர்த்தமற்றது எனவும் டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி அமெரிக்காவிற்கு பயணம் செய்துள்ள நிலையில் வெள்ளை மளிகையில் இரண்டு நாட்டுத் தலைவர்களும் நடத்திய ஊடக சந்திப்பின் போது, ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.