163
குளோபல் தமதிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை நிர்ணயம் செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்பு குறித்த அரசியல்பீட கூட்டம் நேற்றைய தினம் அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது கட்சியின் ஏனைய பதவி நிலைங்கள் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாவிட்டால் வாக்கெடுப்பு நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த விடயங்கள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
Spread the love