ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி விளையாடியுள்ள ஆறு போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்துள்ள நிலையில் அந்த அணியின் தலைவர் கவுதம் காம்பிர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 7-ம் திகதி ஆரம்பமான ஐபிஎல் தொடர் போட்டிகளில் சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய எட்டு அணிகள் கலந்துகொண்டுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை போட்டியிட வேண்டும். லீக் போட்டிகளின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும். இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்றுவரும் போட்டிகளில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் இதுவரை விளையாடி உள்ள ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.
இதையடுத்து தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைவர் கவுதம் காம்பிர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து டெல்லி அணியின் புதிய தலைவராக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் புதிய தலைவரின் தலைமையில டெல்லி அணி அடுத்து 27-ம் திகிதி நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது