குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் கட்சியில் வகித்து வரும் பதவிகளில் இருந்து நீக்குவதில்லை என நேற்று முன்தினம் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு முடிவ செய்துள்ளது.
தற்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கம் வகித்து கொண்டு வேறு கட்சியை தொடங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் வகித்து வரும் பதவிகளில் இருந்து நீக்கப்படவில்லை என்பதால், அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை என மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளது.
16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளனர்.