குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
டென்னிஸ் போட்டிகளி;ன் போது பாரியளவில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சாதாரண போட்டிகளில் அதிகளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடிகள் மற்றும் ஆட்ட நிர்ணய சதி சம்பவங்களில், முதனிலைப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முன்னணி வீரர்களுக்கு தொடர்பு கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
100க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் அட்ட நிர்ணய சதியுடன் தொடர்பு பட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதேவேளை கருத்துக் கணிப்பின் போதும் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.