குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெனிசுலாவில் பாடசாலைகள் மூடப்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. அண்மையில் வெனிசுலாவில் ஸ்கோபோ நகரில் அமைந்திருந்த 400 மாணவர்கள் கற்கக்கூடிய பாடசாலையொன்று மூடப்பட்டுள்ளது. பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் நடத்திய போராட்டத்தினைத் தொடர்ந்து இந்தப் பாடசாலை மூடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஹியுகோ சாவேஸின் ஆட்சிக் காலத்தில் இலவச கல்வி வழங்கப்பட்டதுடன் பல்வேறு நலன் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. எனினும் அதன் பின்னர் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட நிகலோஸ் மரூடாவினால் இவ்வாறு நலன்புரித் திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் 3 மில்லியன் பிள்ளைகள் இடைவிலகியோ அல்லது பாடசாலைக்கு செல்லாமலேயே இருக்கும் நிலைமை நீடித்து வருகின்றது. மேலும் எதிர்வரும் மே மாதம் 20ம் திகதி வெனிசுலாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது