173
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், யாழ். சிவகணேசன் புடைவையகத்துடன் இணைந்து நடாத்தும் திருக்குறள் வினாடிவினாப் போட்டியில் பங்கேற்க விரும்பும் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டில் அல்லது 2019 ஆம் ஆண்டில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பாடசாலை ரீதியாகப் போட்டிக்கு விண்ணப்பிக்க முடியும்.
புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக உயர்தர தமிழ்ப் பாடவிதானத்திற்கு உட்பட்ட வகையில் போட்டி அமையும். போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் மே மாதம்- 11 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். போட்டி எதிர்வரும் மே மாதம்-20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.
போட்டியில் வெற்றியீட்டுவோருக்குப் பெறுமதியான பரிசில்கள் மே மாத இறுதியில் நடாத்தப்படவுள்ள திருவள்ளுவர் விழாவின் போது வழங்கப்படும். போட்டி தொடர்பான மேலதிக விபரங்களை www.thamilsangam.org என்ற தமிழ்ச்சங்கத்தின் இணையத்தளத்தில் பார்வையிட முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love