ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பதவி நிலை மாற்றங்களில் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மாற்றம் தொடர்பில் மக்களின் கருத்தை விரைவில் அறிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பதவி நிலை மாற்றங்களை மக்கள் கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சித் தலைவர், பிரதித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் காலங்களில் ஊடகங்களின் மூலம் மக்களின் அதிருப்தியை கண்டு கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.தே.க கட்சி மறுசீரமைப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல – ரங்கே பண்டார…
188
Spread the love
previous post