குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஸ்பெய்னில் பாலியல் துன்புறுத்தல் குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் ஸ்பெய்னில் நடைபெற்ற எருமையோட்ட திருவிழாவில், ஐந்து பேர் யுவதியை பாலியல் பலாத்காரம் செய்திருந்தனர்.
இது தொடர்பிலான வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் குறித்த ஐந்து பேரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும் அதற்கு தண்டனை விதிப்பதாகவும் அறிவித்துள்ளது.
இதன்படி, ஐந்து சந்தேக நபர்களுக்கும் தலா ஒன்பது ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ஐந்து பேரும் பாலியல் வல்லுறவு அல்லது பாலியல் வன்புணர்ச்சி குற்றச் செயலில் ஈடுபடவில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்து அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துள்ளது. 2016ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.