புத்த பெருமானின் ஒரு தொகை புனித தாதுப் பொருள்கள் யாழ்ப்பாண மண்ணுக்கு வரலாற்றில் முதல் தடவையாகக் கொண்டு வரப்பட்டு, யாழ்ப்பாண மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படுகின்றன என யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் புத்த பகவானின் புனித தாதுப் பொருள்களில் ஒன்றான புனித பல் வைக்கப்பட்டுள்ளதனால்தான் தலதா மாளிகை மிகுந்த உயர்ந்த சிறப்பு பெற்று விளங்குகின்றது. அத்துடன் கண்டி மாவட்டமும் வனப்பும், செழிப்பும் நிறைந்ததாகக் காணப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாண மண் வனப்பும், செழிப்பும் நிறைய பெற்று மிளிர்வதுடன் யாழ் மக்களின் வாழ்க்கை செழுமையும், செம்மையும் பெற வேண்டும் என்கிற ஒரேயொரு காரணத்துக்காக புத்த பகவானின் ஒரு தொகை புனித தாதுப் பொருள்களை யாழ் மண்ணுக் கொண்டு வந்து மக்களின் தரிசனத்துக்கு வைக்கின்றோம்.
இவை எதிர்வரும் 29, 30, 01 ஆம் திகதிகளில் வீரசிங்கம் மண்டபத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இவற்றைத் தரிசித்து யாழ்ப்பாண மக்கள் அனைத்து நன்மைகளைப் பெறலாம் என யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளாh
1 comment
புத்தபெருமான் போதி நிலை அடைந்த அரச மரக் கிளையிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்ட அரச மரக் கன்றானது, யாழ்ப்பாணத்திற்குத்தான் கொடுவரப்பட்டு, பின்னர் தேரில் வைத்து இழுத்து அநுராதபுரம் கொண்டு செல்லப்பட்டு நாட்டப்பட்டதாகத்தான் மஹாவம்ஸ கூறுகிறது. தமிழர்கள் பண்டைக் காலத்தில் மஹாயாண பௌத்தர்களாகத்தானே இருந்தனர்? பிறகு ஏன் பௌத்தத்திலும், புத்தபெருமானிலும் வெறுப்பு? சைவம், வைணவம் என்றால் என்ன என்பதைவிளக்குவீர்களா?