174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையின் கல்வித் திட்டத்திற்கு உலக வங்கி கடன் உதவி வழங்க உள்ளது. சுமார் 100 மில்லியன் டொலர்கள் இவ்வாறு கடன் உதவியாக வழங்கப்பட உள்ளது. கல்வி அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் இலங்கையில் சமூக பொருளாதார மாற்றங்களுக்கு உதவும் வகையிலும் இந்த கடனுதவி வழங்கப்பட உள்ளது.
பிற்படுத்தப்பட்ட பாடசாலைகளுக்கு உதவும் நோக்கில் இந்த கடன் உதவியின் ஊடாக திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளது.
இந்த நிதி உதவித் திட்டத்தின் ஊடாக தரம் 1-5, தரம் 6 முதல் 13 வரையிலான வரையிலான மாணவ மாணவியரும் நலன் பெற்றுக்கொள்ள உள்ளனர்.
Spread the love