குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்தும் குழப்ப நிலைமை நீடித்து வருகின்றது. அண்மையில் கட்சியில் செயற்பட்ட மாற்றங்கள் தொடர்பில் கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் திருப்தியற்ற நிலைமை உருவாகியுள்ளது. முக்கியமான பதவிகளில் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
முக்கிய பதவிகளுக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாறாக கட்சித் தலைவர் ரணில்விக்ரமசிங்க பரிந்துரை செய்ய அதனை கட்சியின் மத்திய செயற்குழு அமோதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் தலைமைத்துவத்திற்கு மீளவும் சவால் விடுக்கும் நோக்கில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.