குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இன்றைய தினத்தை வெசாக் பௌர்ணமி தினமாக ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டி அஸ்கிரிமற்றும் மல்வத்து பீடங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் மே மாதம் 29ம் திகதியே வெசாக் பௌர்ணமி தினம் என தெரிவிக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த மரபு மீறப்பட்டுள்ளதாக மல்வத்து பீடத்தின் அனுநாயக்கத் தேரர் நியான்கொட விஜிதசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
சோதிடர் ஒருவரின் பிழையான கணிப்பே இவ்வாறு வெசாக் பௌர்ணமி தினம் அனுட்டிப்பதில் குழப்ப நிலைமை ஏற்படக் காரணம் என தெரிவித்துள்ளார். தாய்லாந்து உள்ளிட்ட பௌத்த நாடுகள் மே மாதத்தில் வெசாக் பௌர்ணமியை கொண்டாடுகின்றன என தெரிவித்துள்ளார்.