Home சினிமா நூறு இளைஞர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்னையை வலம் வந்த விஜய்

நூறு இளைஞர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்னையை வலம் வந்த விஜய்

by admin

நடிகர் விஜயின் புதிய படமான ‘தளபதி 62’ திரைப்படத்திற்காக பல நூறு இளைஞர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்னையை சுற்றி வலம் வந்துள்ளார் விஜய்.  இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகின்றார். இன்னமும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக சென்னை பச்சையப்பன் கல்லூரியில், இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. கல்லூரி மாணவர்களுடன், மோட்டார் சைக்கிளில் விஜய் ஊர்வலமாக போவது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது.

அந்த காட்சியின் புகைப்படத்தையும், வீடியோவையை ரசிகர் ஒருவர் இணையதளத்தில் வெளியிட, அது வைரலாக பரவி வருகிறது. அதைப்பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.  ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தீபாவளி தினமன்று இந்தப் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More