குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
உலக புகழ்பெற்ற இலங்கையின் திரைப்பட இயக்குனரான கலாநிதி லெஸ்டர் ஜேமீஸ் பீரிஸ் நேற்றிரவு தனியார் மருத்துவமனையில் காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 99 வயது. ரேக்காவ திரைப்படம் மூலம் சிங்கள திரைப்பட உலகிற்குள் பிரவேசித்த ஜேமீஸ் பீரிஸ், 21 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தனது திரைப்படங்களுக்காக சர்வதேச மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ள அவர், இறுதியாக தற்போது திரையிடப்பட்டுள்ள வைஸ்ணவி என்ற திரைப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.
இலங்கை சினிமாத் துறையின் முக்கியஸ்தர்களில் ஒருவராக போற்றப்படும் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் நடத்தப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது பற்றிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். பூரண அரச மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் நடத்தப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இறுதிக் கிரியைகள் குறித்து ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரோஹன கீர்த்தி திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது