161
யாழ்ப்பாணத்தில் வெசாக் வலயமொன்றை யாழ்ப்பாணம் பாதுகாப்பு படை தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது..’யாபா பட்டுனய் தஹம் அமாவய்'(யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்’ ) எனும் பெயரில் நேற்று (29) குறித்த வெசாக் வலயம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பமானது
நேற்று (29) முதல் மூன்று நாட்களுக்கு இடம்பெறும் இந்நிகழ்வில் வெசாக் தோரணங்கள் வெளிச்ச கூடு கண்காட்சிகள் பௌத்த பக்தி பாடல் நிகழ்வுகளுடன் அன்ன தானமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வெசாக் வலயத்தை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love