இந்தியாவின் பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டள்ளது. பீகார் மாநிலத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான இடி மின்னலுடன் பலத்த மழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் உயிரிழந்தவர்களில் இருவர் 10 வயது சிறுமிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மின்னல் தாக்கல் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதல்வர் நித்திஷ்குமார், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் உரிய மருத்துவ வசதி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.