162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளைய தினம் பதவியேற்க உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விஞ்ஞான ரீதியாக அமைச்சுக்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டு புதிய அமைச்சரவைக்கான அறிக்கை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட உள்ளது.
அரசாங்கத்தில் இருந்து அண்மையில் விலகிக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களின் பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் நாளை நடைபெறும் அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு இன்று புதிய அமைச்சர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
Spread the love