291
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சிவனொளிபாத மலை யாத்திரைக் காலம் இன்றைய தினத்துடன் நிறைவடைகின்றது. சிவனொளிபாத மலையில் இன்றைய தினம் நடைபெறவுள்ள விசேட மதவழிபாட்டு நிகழ்வுகளுடன் யாத்திரைக் காலம் பூர்த்தியாகின்றது என சபரகமுவ மாகாண பிரதான சங்க நாயக்கர் பெங்கமுவ தம்மாதின்ன தேரர் தெரிவித்துள்ளார். சிவனொளி பாத மலையில் காணப்படும் புனிதப் பொருட்கள், புத்தரின் சிலைகள் என்பன ஊர்வலமாக மீளவும் பெல்மடுல்ல ரஜமஹா விஹாரைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. பூரண அரச அனுசரணையுடன் வாகனத் தொடரணியாக இந்த ஊர்வலம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love