குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சேர்பியா நாட்டின் துணைப் பிரதமர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த வாரம் அவர் இலங்கைக்கு பயணிக்க உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
சேர்பியாவின் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான ஈவிசி டாசேக் நாளைய தினம் தெற்காசிய நாடுகளுக்கு பயணத்தை ஆரம்பிக்க உள்ளதுடன் எதிர்வரும் 8 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளார்.
சேர்பிய துணைப் பிரதமர் தாம் பயணம் செய்ய உள்ள தெற்காசிய நாடுகளின் தலைவர்களுடன் இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். மேலும் இந்நாடுகளுடன் அவர் சில உடன்படிக்கைகளையும் செய்துக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.