இந்தியா பிரதான செய்திகள்

காஷ்மீரில் இடம்பெற்ற மோதலில் 2 தீவிரவாதிகள் மற்றும் இளைஞர் உயிரிழப்பு


காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 2 தீவிரவாதிகளும் உள்ளூர் இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ராணுவ மேஜர் உட்பட 2 வீரர்கள் காயம் அடைந்தனர் எனவுமராணுவத்தினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ராணுவத்தினருக்கு எதிராக உள்ளூர் இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் அவர்களை விரட்டும் முயற்சியில்இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்னர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.