குளோபல் தமிழ்ச்செய்தியாளர்..
நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய உடன்படிக்கையில் தம்மையும் இணைத்துக் கொள்ளுமாறு சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. எதிர்வரும் 18 மாத கால ஆட்சியை முன்னெடுப்பதற்கு புதிதாக உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவது குறித்து பிரதான கட்சிகளாக ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சிறுபான்மை கட்சிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. புதிய உடன்படிக்கையின் பங்குதாரர்களாக தம்மையும் இணைத்துக் கொள்ளுமாறு சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இந்தக் கோரிக்யை முன்வைத்துள்ளன. எனினும், இந்தக் கோரிக்கை குறித்து பிரதான கட்சிகள் இதுவரையில் எவ்வித பதில்களையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.