சுவிட்சர்லாந்தின் அல்ப்ஸ் மலையில் மோசமான வானிலையால் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி மலையேற்ற வீர்ர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி, பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர்கள் சிலர் பறந்து செல்லும் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்ததுடன் மேலும் சிலர் ஒரு குழுவாக மலையேறிக் கொண்டிருந்தனர். அப்போது மோசமான வானிலையால் சூறாவளி காற்று வீசியதில் மலையேற்ற வீரர்கள் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் அங்கு சென்ற மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு பனியில் சிக்கிய பறக்கும் வீரர்கள் மற்றும் மலையேற்ற குழுவை சார்ந்தவர்களை மீட்டனர்.
எனினும் 6 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பலரை தேடும் பணியும் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.