159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இன்றைய தினம் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சமுர்த்தி, தொழில் அமைச்சு, உயர்கல்வி, பெருந்தெருக்கள் உள்ளிட்ட 18 அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. எனினும், ஏனைய அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்படாது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
எவ்வாறெனினும், நாளைய தினம் பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்த விஜயதாச ராஜபக்ஸவிற்கு இன்றைய தினம் உயர்கல்வி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love