குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அமைச்சரவை நியமனத்தின் போது பூரண இணக்கத்துடன் இந்த அமைச்சரவை நியமனம் மேற்கொள்ளப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களின் செயற்பாடுகளின் அடிப்படையிலேயே மக்களின் திருப்தி அதிருப்தி நிர்ணயிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிடடுள்ளார். புதிய அமைச்சர்கள் தங்களது பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்வார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு அமைச்சர் பதவிகள் ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.