272
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) ஏற்பாட்டில் நடத்தப்பட்ட தொழிலாளர் தின பேரணி யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
இதில் ஜேவிபியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட பொது அமைப்புக்கள் சிலவற்றின் பிரதிதிகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.
யாழ்ப்பாணம் றக்கா வீதியில் ஆரம்பமான பேரணி கோயில் வீதி – வைத்தியசாலை வீதி – சத்திரச் சந்தியை அடைந்து கே.கே.எஸ் வீதி ஊடாக யாழ்ப்பாண மாநகர சபை மைதானத்தை வந்தடைந்தது.அங்கு தொழிலாளர் தினக் கூட்டம் நடைபெற்றது.
Spread the love