ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கோடை வெயில் கடுமையாக இருப்பதன் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் வெயிலுக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவின் பல பகுதிகளிலும் மிக அதிக அளவில் உஷ்ண நிலை மாறி வருகின்றதன் காரணமாக முதியோர், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோன்று, தெலங்கானா தலைநகரம் ஹைதாராபாத்திலும் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக வெயில் பதிவாகி வருவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் தெலங்கானா மாநிலத்தில் 12 பேரும், ஆந்திராவில் 7 பேரும் வெயில் கொடுமையால் உயிரிழந்து உள்ளனர். இதனையடுத்து மதிய நேரத்தில் பொதுமக்கள் குறிப்பாக முதியோர் மற்றும் குழந்தைகள் வெளியே செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர