லிபியாவில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி முகமது கடாபியின் ஆட்சியில் தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அவரது மரணத்திற்கு பின்னர் 2012-ம் ஆண்டில் தேர்தல் நடைமுறை உருவானது.
அங்கு நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் சுயாட்சி தன்மையுடன் செயல்படக் கூடிய அமைப்புகளில் ஒன்றாக தேர்தல் ஆணையமும் உள்ளநிலையில், இன்று தேர்தல் ஆணையத்தின் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல நடத்தியுள்ளனர்.இதில்11 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும், 2 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது