173
தென் ஈரான் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 31 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் சிஸ்கத் நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தினால் வீடுகள் குலுங்கியாதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடியதாகவும் நிலநடுக்கம் காரணமாக பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதே பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் காரணமாக 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 8,000 பேர் வரை காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love