குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊடகவியலாளர்களுக்கு ஆதரவான முறையில் மியன்மார் காவல்துறை உத்தியோகத்தர் அளித்த சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ரொய்ட்டேர்ஸ் ஊடகவியலாளர்கள் அரச ரகசியங்களை வைத்திருப்பதாக சுமத்திய குற்றச்சாட்டுக்கள் காவல்துறையினரினால் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை கப்டன் மோ யேன் நாங் ( Moe Yan Naing ) மியன்மார் நீதிமன்றில் இவ்வாறு சாட்சியமளித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் கைதான ஊடகவியலாளர்களை குற்றச் செயலில் சிக்கச் செய்யுமாறு உயர் காவல்துறை அதிகாரி பணிப்புரை விடுத்திருந்தார் என அவர் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.
காவல்துறை ஒழுக்காற்று விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் தமக்கு ஓராண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் விசாரணைகளின் போது முன்னிலையாக முடியவில்லை எனவும் காவல்துறை உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
32 வயதான Wa Lone மற்றும் 28 வயதான Kyaw Soe Oo ஆகிய ரொய்ட்டேர்ஸ் ஊடகவியலாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது