144
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்றைய தினம் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இன்றைய தினம் முற்பகலில் இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் சகல அரசியல் கட்சிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.
Spread the love