சிறைகளில் கைதிகள் கைத்தொலைபேசி பயன்படுத்துவதை தடுக்க தமிழகத்திலுள்ள மத்திய சிறைகளில், 5.40 கோடி ரூபா செலவில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு வருவதாக உயர்நீதிமன்றில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் கைத்தொலைபேசி களைசர்வசாதாரணமாக பயன்படுத்துகின்றனர் என்பது உள்ளிட்ட பல முறைப்பாடுகளுடன் சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
இந்தநிலையில் சிறைகளில் உள்ள பாதுகாப்பு குறித்து, தமிழக சிறைத்துறையிடம் நீதிபதி என்.கிருபாகரன் பல கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக உயர்நீதிமன்றில் தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா தாக்கல் செய்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் உள்ள உயர் பாதுகாப்பு நிலையங்களிலும் , 12 கைத்தொலைபேசி ஜாமர் கருவிகளை பொருத்துவதற்கு, தமிழக அரசு .5.40 கோடி ரூபா ஒதுக்கியுள்ளது எனவும் இதன்படி 9 மத்திய சிறைகளுக்கும், ஜாமர் கருவிகள் வழங்கப்பட்டுவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.