குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
விடுதலைப் புலிகளுடன் போர் நடைபெற்ற காலத்தில் அதிகளவில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பலர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் இராணுவ உறுப்பினர்களையே அதிகளவில் சிறையில் அடைத்துள்ளது எனவும் குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்த புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் நடந்த கொலைகள், ஆட்கடத்தல்கள் சம்பந்தமாக பாதுகாப்பு படைகளின் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அப்போது நடந்த இந்த சம்பவங்களுக்கு உத்தரவிட்டவர் கோத்தபாய ராஜபக்ச எனக் கூறப்படுகிறது.