சர்வதேச போட்டிகளில்; பந்து வீசுவதற்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரொன்ஸ்போர்ட் பீற்றன் (RonsfordBeaton ) க்கு ஐசிசி தடைவிதித்துள்ளது. பீற்றன் கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியபோது இவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பீற்றனின் பந்து வீச்சினை ஐசிசியினால் அங்கீகரிப்பட்ட ஆராய்ச்சி மையத்தினால் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பீற்றன் தனது பந்து வீச்சை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. இதனையடுத்து ஐசிசி சர்வதேச போட்டியில் பந்து வீச அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் நடைபெறும் லீக் தொடர்களிலும் பந்து வீச தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும் உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது