இந்தியாவின் வடமாநிலங்களில் ஏற்பட்ட புழுதி புயலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை நேற்று இரவு திடீரென புழுதி புயல் தாக்கியது.
இந்தப் புழுதி புயலில் சிக்கி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ராஜஸ்தானில் புழுதி புயலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வீதிகளில் சரிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தலா 2 பேர் இறந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது